காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பீட்டில் அளிக்கப்படும் மொத்த மதிப்பெண்கள்: தேர்வுத்துறையின் புதிய அறிவிப்பு என்ன?

மாதிரி படம்

காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் எவ்வளவு மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்சி அடையச்செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது..

  • Share this:
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன் நடத்தப்படாமல் இருந்த 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. அத்துடன் அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்தது.

அதன்படி 80% அவர்கள் பெற்ற காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் மீதமுள்ள 20% மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது தேர்வுத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி அடையச் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பலர் தேர்ச்சி அடையவில்லை என்றும் பலர் தேர்வெழுதவில்லை என்றும்  தேர்வுத் துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும் படிக்க...

Photos | தீவிர கண்காணிப்பில் சென்னை ஊரடங்கு: முக்கிய சாலைகள் அடைப்பு

இதனையடுத்து தற்போது தேர்வுத்துறை மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் தேர்ச்சி என்ற  உத்தரவை பிறப்பித்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Published by:Vaijayanthi S
First published: