தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார்.

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
அமைச்சர் விஜயபாஸ்கர்
  • Share this:
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலர் ராதாகிருஷ்ணன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபஸ்கர்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று ஊக்கத்தை அளித்துள்ளார். இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முறையை தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது; அந்த வகையில் இந்த சஞ்சீவனி திட்டம் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் 35,000 பேர் பயன் அடைந்துள்ளனர் என்றார்.

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சமூக வலைதளங்களில் ஆதாரம் இல்லாமல் எந்தச் செய்திகளையும் பரப்ப வேண்டாம் என்பதை பலமுறை கூறியுள்ளோம். அனைத்து தகவல்களையும் வெளிப்படையாகத் தருவது தமிழகம்தான். தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்துள்ளார்கள் என்பது தவறு. தமிழகத்தின் IMA தலைவரே இதனை மறுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வது தவறு, மீண்டும் இது குறித்து ஆய்வு செய்து எத்தனை பேர் என்பதை அறிவிப்போம். தொடர்ந்து இந்த நோயை எதிர்த்து போராடி வரும் முன் களப் பணியாளர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறினார்.


Also read: சென்னை மணலியில் சேமிக்கப்பட்ட 43 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் எங்கே?

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம். உலகமே வியந்து பார்க்கும் வகையில் சென்னையில் பாதிப்பைக் குறைத்துள்ளோம். பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 40% இருந்த நிலையில் தற்போது 7% மாறி உள்ளது. அதேபோன்று தமிழகம் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கையில் 18% மட்டுமே தற்போது மருத்துவமனையில் உள்ளனர். மற்ற அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து களத்தில் நின்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

மேலும், நோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கை குறைத்து வைத்து காட்ட வேண்டும் என்றால் சோதனை செய்வதன் எண்ணிக்கையைக் குறைக்கலாம். ஆனால், தொடர்ந்து சோதனையை அதிகரித்துக் கொண்டே உள்ளோம். தமிழகத்தில் எந்த ஒரு ஒளிவுமறைவும் இல்லாமல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை அளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.தமிழகத்தில் இந்த கொரோனா நோய்க்குப் பயன்படுத்தப்படும் Tocilizumab, remdesvir, enoxaprin ஆகிய மருந்துகளை அதிக விலைக்கு ஒரு சிலர் விற்பதாக புகார் எழுந்துள்ளது என்றும், இந்த மருந்துகளை அதிக விலைக்கு விற்கும் நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading