ஒரு தடுப்பூசி தயாரிக்க எத்தனை நாட்கள் ஆகும்? தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்

கொரோனா தடுப்பூசி - மாதிரி படம்

ஒரு கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு 3 மாத காலம் வரை தேவைப்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

  • Share this:
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீள்வதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், தடுப்பூசி தயாரிப்பு எப்படி நடைபெறுகிறது. ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு மக்களிடம் வந்து சேர்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. தடுப்பூசி தயாரிப்பு என்பது சில ரசாயனங்களை ஒன்றாக கலப்பது போன்ற எளிதான நடைமுறை அல்ல. அது உயிரியல் தயாரிப்பு முறையாகும்.

முதலில் வைரஸ் வளர்க்கப்படுவதற்கான நுண்உயிரியை ( micro organism) கண்டறிய வேண்டும். அது ஆங்கிலத்தில் host எனப்படும். அதைக் கண்டறிந்த பிறகு வைரஸ் அந்த நுண் உயிரியில் வைக்கப்படும். அந்த வைரஸ் நுண் உயிரியை பாதிக்கும். இந்த நடைமுறையில் நமக்கு தேவையான vaccine molecule உருவாகும். பிறகு அதனை அந்த நுண் உயிரியிலிருந்து பிரித்து எடுக்க வேண்டும். இது ரசானயங்கள் உதவியுடன் செய்யப்படும். அதன் பிறகு நுண் உயிரியிலிருந்து கழிவுகள் ஏதும் ஏற்றப்படவில்லை எனது உறுதி செய்ய பல வகையில் வடிகட்டப்படும். தயாரிப்பின் இந்த கட்டத்தில் வைரஸ் inactivate செய்யப்படும். அதாவது அந்த வைரஸால் தன்னை பெருக்கிக் கொள்ள முடியாது. இதை உறுதி செய்த பிறகு மற்ற பிற திரவங்கள் கலந்து தடுப்பூசி இறுதி வடிவத்தை பெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் பிறகு தரத்தை சோதிக்கும் பல நடைமுறைகளுக்கு தடுப்பூசி உட்படுத்தப்படும். அதன் பிறகே தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நடைமுறைகள் செய்து முடிக்க பல வாரங்கள் ஆகும். உதாரணமாக கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க நான்கு மாதங்கள் ஆகும். அதாவது ஜூலை மாதம் பயன்படுத்த தேவையான தடுப்பூசிகளை மார்ச் மாதமே தயாரிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். இதே போன்று மற்ற தடுப்பூசிகளை தயாரிக்க குறைந்தது ஆறு முதல் எட்டு வாரங்களாவது ஆகும்.
Published by:Karthick S
First published: