கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எவ்வளவு காலம் ஆகும்?

பொதுவாக புதிய மருந்து கண்டுபிடிக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அவகாசம் தேவைப்படும். தொடர்ச்சியான பரிசோதனைகள் நடந்துவருவதாக நம்பிக்கை தெரிவிக்கிறது டபிள்யூ.ஹெச்.ஓ

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எவ்வளவு காலம் ஆகும்?
கொரோனா
  • Share this:
கொரோனா பெருந்தொற்றில் இருந்து மனிதகுலத்தை பாதுகாக்க உலக சுகாதார நிறுவனம் பரிட்சார்த்த முறையில் நான்கு மருந்துகளை பரிசோதனைக்குட்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்நோய் தொற்றை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சீனாவின் ஊஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த வைரஸ், கணிக்க முடியாத அளவுக்கு அதிதீவிரமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸால் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் நான்கு மருந்துகளை மெகா சோதனை முறையில் பரிசோதிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. மருத்துவத்துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் டஜன் கணக்கில் கூட்டு மருந்துகளை பரிந்துரைத்த போதும், நம்பிக்கை அளிக்க கூடிய நான்கு முக்கிய மருந்துகள் மட்டும் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, எபோலா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் remdesivir கூட்டு மருந்து, மலேரியா சிகிச்சைக்கான குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் பரிசோதனை முறையில் உள்ளன

அத்துடன் எச்.ஐ.வி பாதித்தவர்களுக்கான lopinavir மற்றும் ritonavir மருந்துகளின் கூட்டு கலவையும் கொரோனா பாதித்தவர்களுக்கான சிகிச்சைக்கு பரிசோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது.

வழக்கமாக புதிய மருந்துகள் உருவாக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை அவகாசம் தேவைப்படும். அதிலும், பெரும்பாலான பரிசோதனைகள் தோல்வியில் முடிவடைந்து விடுகிறது. தொற்று நோய்க்கான தடுப்பு மருந்து பரிசோதனைகளில் 5-ல் ஒரு விழுக்காடு மட்டுமே வெற்றிகரமாக அமைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலமே கொரோனா வைரஸுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Also see...

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்