கொரோனாவை வெல்ல உதவும் பிளாஸ்மா சிகிச்சை எப்படி செயல்படுகிறது?

டெல்லியைத் தொடர்ந்து, அசாம் மாநிலத்திலும் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை எப்படி உதவுகிறது என பார்க்கலாம்.

கொரோனாவை வெல்ல உதவும் பிளாஸ்மா சிகிச்சை எப்படி செயல்படுகிறது?
பிளாஸ்மா தெரபி
  • Share this:
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படாத நிலையில், வேறு சில மருத்துவ முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. அவற்றில் மிக முக்கியமான மருத்துவ முறையாக பிளாஸ்மா சிகிச்சை கருதப்படுகிறது. இந்த சிகிச்சை முறை நல்ல பலனை அளித்ததை அடுத்து, இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லியில் திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. பிளாஸ்மா சிகிச்சைமுறை கொரோனா தடுப்பில் பெரும் உதவி புரிவதாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறையும் கூறியுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிளாஸ்மா சிகிச்சை முறை குறித்து அறிந்து கொள்வது அவசியமாகும்.

பிளாஸ்மா என்பது குருதி அணுக்களை ஏந்திச்செல்லும் நிறமற்ற திரவமாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மா, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்படுகிறது. இந்த முறையில் குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள ஆண்டிபாடிகளை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால், கொரோனா தொற்றை எதிர்த்து போரிட உடல் தயாராகிறது. ரத்ததானம் செய்வது போன்றதாகவே பிளாஸ்மா தானமும் உள்ளது. பிளாஸ்மா தானம் செய்பவர் கொரோனா சிகிச்சை மேற்கொண்டு நலம் பெற்று, இரண்டு வாரங்களுக்கு மேலாக அறிகுறி தென்படாமல் இருத்தல் அவசியம்.

மேலும் படிக்க...கொரோனா தடுப்பு மருந்து சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை செய்யப்படும் - ஐசிஎம்ஆர்

மேலும் நல்ல உடல்நலமும் ஹீமோகுளோபின் அளவு 8-க்கு மேல் இருத்தலும் அவசியமாகும். தானமளிப்பவரின் உடல் எடை 50 கிலோவுக்கு கீழ் இருக்கக்கூடாது. தானம் அளிப்பவர் 18 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.குழந்தை பெற்ற பெண்களிடமிருந்து பிளாஸ்மா தானம் பெற முடியாது. எயிட்ஸ், ஹெப்படிட்டிஸ் மற்றும் நீரழிவு நோய் தாக்கம் உள்ளவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முடியாது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading