அதிதீவிர நடவடிக்கையும்... கியூபாவின் மருத்துவ உதவியும்... கொரோனாவிலிருந்து மீண்ட சீனா

அதிதீவிர நடவடிக்கையும்... கியூபாவின் மருத்துவ உதவியும்... கொரோனாவிலிருந்து மீண்ட சீனா
மாதிரிப்படம் (Reuters)
  • Share this:
கொரோனா வைரசின் ஊற்றாக உருவெடுத்த சீனா, தற்போது அந்த பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது. இதற்கு அந்நாடு எடுத்த தீவிர நடவடிக்கைகளும், கியூபாவின் உதவியுமே காரணம். சீனாவுக்கு எப்படி உதவியது கியூபா?

சீனாவில் கொரோனா நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பலர் வேகமாக குணமடைந்து வருகின்றனர். புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு சீன அரசு விதித்த கடும் கட்டுப்பாடுகள் ஒரு புறம் என்றால், நோய் தொற்றிலிருந்து விடுபட மருத்துவர்கள் அளித்த மருந்துகளும் ஒரு காரணம். இங்கு தான் தனது உதவிக்கரத்தை நீட்டியது கியூபா. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டியலிடப்பட்ட 30 மருந்துகளில் கடைசியாக சீன மருத்துவர்கள் தேர்வுசெய்தது Cuban Interferon Alpha 2b என்ற மருந்தைத்தான்.

Cuban Interferon Alpha 2b, கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளைக் கொண்ட வைரஸ்-களை தாக்கி அழிக்கக் கூடியதாகும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தாக்குதலின் வீரியத்தை குறைத்து உயிரிழப்பைத் தடுப்பதாக கூறுகிறார் கியூபாவைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிபுணரான லூயிஸ் மார்டினெஸ்.


1981- ஆம் ஆண்டில், கியூபாவில் பரவிய டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது தான் Cuban Interferon Alpha 2b.

Interferons என்ற நச்சுயிரிப் பெருக்கத் தடுப்பு புரதமானது, செல்களால் உற்பத்தி செய்யக் கூடியவை. இவை வைரஸ் தாக்குதலின் போது, மற்ற செல்களுக்கு வைரஸ் தடுப்பை அதிகரிக்க கட்டளையிடுபவை. டெங்கு காய்ச்சலை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்து, பல்வேறு வைரஸ் காய்ச்சல்களுக்கு சிறந்து விளங்குகிறது.

ஹெபடைடிஸ் பி மற்றும் சி, எய்ட்ஸ், டெங்கு ஆகிய வைரஸ் தொற்றுகளுக்கு தீர்வாக அமைகிறது. அது மட்டுமல்லாமல், Interferon Alpha 2b புற்றுநோய்க்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. தற்போது கொரோனா வைரசை குணப்படுத்த Interferon Alpha 2b-யால் முடியுமா என்பது குறித்து தெளிவு பெற சிறிது காலம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்