முகப்பு /செய்தி /கொரோனா / COVID-19 | மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும் கொரோனா வைரஸ்… விடுபடும் வழிகள் என்ன?

COVID-19 | மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும் கொரோனா வைரஸ்… விடுபடும் வழிகள் என்ன?

கொரோனாவில் இருந்து மீண்ட மக்களிடையே வேறு சில பிரச்சனைகளும் உருவாகியுள்ளன.

கொரோனாவில் இருந்து மீண்ட மக்களிடையே வேறு சில பிரச்சனைகளும் உருவாகியுள்ளன.

கொரோனாவில் இருந்து மீண்ட மக்களிடையே வேறு சில பிரச்சனைகளும் உருவாகியுள்ளன.

  • Last Updated :

உலக நாடுகளை கொரோனா வைரஸ் பாதிக்க ஆரம்பித்த பிறகு, அது தொடர்பான புதிர்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளிக்க நீண்ட மாதங்களாக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக தற்போது ஆராய்ச்சியாளர்கள் நாவல் கொரோனா வைரஸ் தொடர்பான பல கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். அதன்படி முதன்முதலில், கொரோனா வைரஸ் மேல் சுவாசக் குழாயின் தொற்றுநோயாகக் கருதப்பட்டது. இப்போது கொரோனா வைரஸ் உடலின் மற்ற பாகங்களையும் அதே தீவிரத்தோடு பாதிக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அதேபோல வைரஸால் பாதிக்கப்படும் ஒருவருக்கு நீண்டகால பக்க விளைவுகள் ஏற்படும். இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம் என தற்போது வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 7 பேரில் ஒருவர் மூளையில் நினைவகம் உறைதல் போன்ற நரம்பியல் பக்க விளைவுகளை சந்தித்ததாக ஆய்வின் தரவுகள் தெரிவிக்கிறது. வைரஸ் நேரடியாக மூளை செல்கள் அல்லது நரம்புகளைத் தாக்காது என்றாலும், கடுமையான சந்தர்ப்பங்களில் பக்கவாதம் மற்றும் வலிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கோவிட் உங்கள் மூளையை எவ்வாறு பாதிக்கிறது?

பொதுவாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு மூளை தொடர்பான சிக்கல்களின் அறிகுறி தோன்றும். மேலும் மூளை தொடர்பான பிரச்சனைகளின் தீவிரம் நபருக்கு நபர் வேறுபடுகிறது. சிலர் நினைவாற்றல் இழப்பு, கவனக் குறைவு அல்லது சோர்வு போன்ற லேசான அறிகுறிகளை அனுபவிக்கலாம். அதே நேரத்தில் நீண்ட காலத்திற்கு சிகிச்சை பெறுபவர்கள், ஆக்ஸிஜன் உதவியை நாடுபவர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ளலாம். கொரோனாவால் மூளையில் ஏற்படும் சிக்கல் தொடர்பான அறிகுறிகள் பின்வருமாறு:

குழப்பம்

தலைவலி

மன அழுத்தம்

கவனம் செலுத்த இயலாமை

வலிப்புத்தாக்கங்கள்

பக்கவாதம்

வாசனை மற்றும் சுவை இழப்பு

நடத்தையில் மாற்றங்கள்

உணர்வு இழப்பு

இதுதவிர, கொரோனாவில் இருந்து மீண்ட மக்களிடையே வேறு சில பிரச்சனைகளும் உருவாகியுள்ளன. மூளையை கொரோனா எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், சில சமயங்களில் தொற்று நோய் தொடர்பான சில சிகிச்சைகள் மூளையின் வெளிப்புற அடுக்குகளில் உள்ள சாம்பல் நிறத்தின் அளவைக் குறைக்கலாம் என்பதை வெளிப்படுத்தியது.

கொரோனா ஏன் மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது?

கொரோனா வைரஸ் நமது மூளை செல்களைப் பாதிப்பதற்கான சரியான காரணங்களை வல்லுநர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பல கோட்பாடுகள் மூலம் மூளை பாதிப்பில் கொரோனா இன்றியமையாத பங்கைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அவை பின்வருமாறு:

கடுமையான தொற்று: ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தீவிர தொற்று ஏற்படும் போது, வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தில் (மூளை மற்றும் முதுகெலும்பு) நுழைந்து தொற்றுநோயை ஏற்படுத்தும். ஆய்வுகளின் போது, ​​முதுகெலும்பு திரவத்தில் வைரஸின் மரபணுப் பொருளை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது என்று கூறியுள்ளனர்.

Must Read | ‘இனியும் தயங்காதீங்க’ | பால் அல்ல… குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்து… உயிர்காக்கும் ‘தாய்ப்பால் வங்கி’ குறித்து தெரியுமா?

அதிகப்படியான நோயெதிர்ப்பு அமைப்பு:

மற்றொரு காரணம் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியாக கூட இருக்கலாம். உடலில் உள்ள வைரஸை எதிர்த்துப் போராடுவது திசு மற்றும் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இதனால் கூட மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

கொரோனா காரணமாக உங்கள் உடலில் ஏற்படும் உடல் மாற்றங்களான அதிக காய்ச்சல், குறைந்த ஆக்ஸிஜன் அளவு அல்லது உறுப்பு செயலிழப்பு போன்றவை மூளை சிக்கல்களுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று மற்றொரு கோட்பாடு கூறுகிறது. காலப்போக்கில், இது மயக்கம் அல்லது கோமாவுக்கு கூட வழிவகுக்கும்.

கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் கவனிப்பது போலவே, உங்கள் மூளை ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது முக்கியம். இதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அதன் விளைவைக் குறைக்கவும் உங்கள் நரம்பியல் ஆரோக்கியத்தை மீண்டும் உருவாக்கவும் உதவும். மேலும் தற்போதைய கொரோனா நெருக்கடியில் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க நீங்கள் செய்யக்கூடிய முக்கியமான ஐந்து விஷயங்கள் குறித்து பின்வருமாறு காண்போம்.

மூளைக்கு சவாலான செயல்களில் ஈடுபடுங்கள்:

நம் உடலின் தசைகளை வலுப்படுத்த, நாம் வலிமை பயிற்சி மற்றும் கார்டியோ பயிற்சிகளை செய்கிறோம். அதேபோல், உங்கள் மூளையின் தசைகளை வலுப்படுத்த, சில மூளை-தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். மனரீதியாக சவாலான செயல்களில் ஈடுபடுவது உங்கள் மூளை செல்களை மாற்றியமைத்து உங்கள் செறிவு அளவை மேம்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மூளைக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்:

உங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த மற்றும் மீட்பு செயல்முறையை துரிதப்படுத்த உதவும் உணவு உள்ளது. அதாவது கீரைகள், கொழுப்புள்ள மீன்கள் மற்றும் பெர்ரிகளைச் சேர்ப்பது மூளையின் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பெருமூளை கோளாறுகளைத் தடுக்கும். உங்களால் முடிந்தவரை மூளைக்கு ஆரோக்கியமான உணவுகளை உங்கள் உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

தியான பயிற்சி:

தியானம் செய்வது உங்கள் மனதை அமைதிப்படுத்தவும், மூளை செறிவினை அதிகரிக்கவும் சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கிறது. தியானம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் ஒரு உடலியல் தளர்வு பதிலைத் தொடங்கும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரவில் நிம்மதியாக தூங்குங்கள்:

top videos

    உங்கள் தூக்கமும் மூளையின் ஆரோக்கியமும் நேரடியாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. எனவே, இரவில் நிம்மதியாக தூங்க முயற்சி செய்யுங்கள். சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வார இறுதி நாட்களில் கூட இந்த வழக்கத்தை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். தரமான தூக்கத்தின் ஒரு இரவு நமது தினசரி சிந்தனை, நினைவகம் மற்றும் மனநிலையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

    First published:

    Tags: Corona impact, Covid-19, Healthy Lifestyle, News On Instagram