கொரோனா பெருந்தொற்று தமிழகத்திற்குள் வந்த பாதை...!

கொரோனா பெருந்தொற்று தமிழகத்திற்குள் வந்த பாதை...!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: March 29, 2020, 9:58 AM IST
  • Share this:
தமிழகத்தில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 42 ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தில் எப்படி கொரோனா தொற்று நுழைந்தது என்ற பின்னணியை பார்க்கலாம்.

கொரோனா தொற்று உறுதியானவர்களில் அதிகபட்சமாக 5 பேர் பிரிட்டன் நாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் என்கிறது சுகாதாரத்துறையின் தரவு. இரண்டாவதாக, இந்தோனேசியாவிலிருந்து சேலத்திற்கு சுற்றுலா வந்த 4 பேர் மூலம் தமிழகத்திற்குள் கொரோனா ஊடுருவியுள்ளது.

மூன்றாவதாக, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளிலிருந்து வந்த தலா 3 நபர்களுடன் சேர்ந்து கொரோனா வைரஸும் தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. நான்காவதாக, நியூஸிலாந்தில் இருந்து வந்த இருவர் மற்றும் ஸ்பெயின், ஓமன், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேற்கண்ட நாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்களில், பெரும்பாலனவர்கள், சிங்கப்பூர், டெல்லி, பெங்களூர் வழியாக வந்துள்ளனர். அதனால், தாண்டிவந்த இடங்களிலிருந்து தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  • கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 36 பேரில், அதிக நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்?

தமிழக சுகாதாரத்துறையின் புள்ளி விபரங்களின்படி, துபாயிலிருந்து வேலூர் திரும்பிய 26 வயது இளைஞருடன் தொடர்பில் இருந்த 188 பேரை தனிமைப்பட்டுத்தப்பட்டதே மிகப்பெரிய எண்ணிக்கையாக இதுவரை இருக்கிறது. அடுத்தபடியாக பிரிட்டன் நாட்டிலிருந்து கோவை திரும்பிய, திருப்பூரைச் சேர்ந்த 48 வயது நபருடன் தொடர்பில் இருந்த 185 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி வழியாக சேலம் வந்த இந்தோனேசியர்கள் 4 பேருடன் தொடர்பில் இருந்த 172 பேர் அடையாளம் காணப்பட்டு கண்காணிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டுப் பயண பின்னணி இன்றி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 170 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியிலிருந்து ரயில் மார்க்கமாக சென்னை திரும்பிய 25 வயது இளைஞருடன் தொடர்புடைய 163 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 36 பேரில் 11 பேருக்கு,  வைரஸால் பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமே தொற்றியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 87,475 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் வெளிநாடுகளிலிருந்து வந்த பின்னணியுடன் அதிதீவிர கண்காணிப்புக்கு உள்ளனவர்கள் 15,629 பேர் என்கிறது சுகாதாரத்துறை. இதில், 5000 பேருடன் சென்னை டாப் இடத்தில் இருக்கிறது. 1011 பேருடன் கன்னியாகுமரி இரண்டாவது இடத்திலும், 897 பேருடன் தஞ்சை மூன்றாவவது இடத்திலும், 726 பேருடன் கோவை நான்காவது இடத்திலும் உள்ளன.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading