• HOME
 • »
 • NEWS
 • »
 • coronavirus-latest-news
 • »
 • இந்தியாவின் மருத்துவ உலகை ஒரே இரவில் மாற்றிய கொரோனா வைரஸ்!

இந்தியாவின் மருத்துவ உலகை ஒரே இரவில் மாற்றிய கொரோனா வைரஸ்!

கொரோனா நோய்த் தொற்றுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பல மருத்துவ நிபுணர்கள் இறுதி சோதனையில் உள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பல மருத்துவ நிபுணர்கள் இறுதி சோதனையில் உள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  35 வயதான பிரியதர்சினி, 2 குழந்தைகளுக்கு தாய். ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து கடந்த ஜனவரியில் சென்னை அடையார் கேன்சர் மருத்துவமனைக்கு வந்திருந்தார், சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனை 1954-ல் தொடங்கப்பட்டு, தற்போது வரை பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது அனைவரும் அறிந்ததே.

  கடந்த 2.5 மாதங்களாக மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுடன் நம்பகமான பிணைப்பை பிரியதர்ஷினி ஏற்படுத்தினர். அவருக்கு ஜனவரி மாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, பிப்ரவரியில் கீமோதெரபியின் முதல் சுழற்சி சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த சுழற்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்ய வேண்டியது.

  ஆனால், கோவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட மாநில எல்லைகள் மூடப்பட்டன. போக்குவரத்து தடைபட்டது, இதனால், சிகிச்சை மையத்திற்கு எவ்வாறு செல்வது என்ற குழப்பம் பிரியதர்ஷினிக்கு வந்தது. மருத்துவரின் ஆலோசனையையும் சிகிச்சையில் குறிப்பிடப்படாத தாமதங்களின் தாக்கங்களையும் அவர் அடிக்கடி நினைவுபடுத்துவதால் கவலை நிரப்புகிறது. அது அவளுடைய உயிர்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கிறது.

  இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் கேன்சரால் பாதிக்கப்பட்ட சுமார் 20 லட்சம் பேரில் பிரியதர்ஷினியும் ஒருவர். தற்போதைய ஊரடங்கு, சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் கேன்சர் நோயாளிகளின், சிகிச்சைக்கு தடைக்கல்லைப் போட்டுள்ளது.

  1975-ல் 5 மண்டல கேன்சர் சிகிச்சை மையங்கள் இருந்த நிலையில், தற்போது அது 25 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், 138 கோடி மக்களுக்கு இது சரியான எண்ணிக்கை அல்ல.

  இந்தியாவில் நோயாளிகள் மருத்துவக் காரணங்களுக்காக நாட்டின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனையில் கடினமான பயணங்களை மேற்கொள்வது சாதாரணமல்ல. ஆனால், இப்போது, ஊரடங்கால் அது தடைபட்டுள்ளது.

  பல நோயாளிகளின் சிகிச்சை இடையிலேயே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, உணவு, தற்காலிகமாக தங்கும் இடம் என்று ஒரு நோயாளி சிகிச்சை பெறும் போது, பல விஷயங்கள் அத்தியாவசியமாகிறது.

  மருத்துவமனைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளும் அதிகம் பேர் வரக்கூடாது. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு கவச உடை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் நீண்டுகொண்டே போகின்றன. உலக சுகாதார அமைப்பின் தரவின்படி கேன்சர் என்பது உலகளவில் அதிக மரணத்தை விளைவிக்கும் காரணியில் இரண்டாவதாக உள்ளது.

  வரும் காலங்களில் அரசுகள் இத்தகைய சூழல்களை கருத்தில் கொண்டு, சுகாதாரத்திற்கு ஒதுக்கும் நிதியை அதிகப்படுத்த வேண்டும். மண்டல கேன்சர் சிகிச்சை மையங்கள் அதிகளவில் நாடு முழுவதும் அமைக்க வேண்டும்.

  - டாக்டர் ஆனந்த் ராஜா, டாக்டர் மஞ்சுளா ராவ் (அடையார் புற்றுநோய் மருத்துவமனை)


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankar
  First published: