12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் சென்னையில் இன்று முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை

கோப்புப் படம்

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் சென்னையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று முதல் சென்னையில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 • Share this:
  கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் சென்னையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று முதல் சென்னையில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

  கடந்த சில நாட்களாக மீண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ளனவா? என பரிசோதனை மேற்கொள்ள தன்னார்வலர்களை களம் இறக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

  இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி கூறுகையில், “சென்னையில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,300 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரும் வெளியே வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  இந்தப் பரிசோதனையில் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களை அந்த பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் முகாமுக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யயப்படும். இந்த கொரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.

  கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த திட்டம் நல்ல பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதலாக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

  Must Read : மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது!

   

  இந்நிலையில், இன்று மாலை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: