கொரோனா தனிமை முகாமில் இருந்து திரும்புவதற்குள் வீட்டுக்கு பூட்டு போட்ட உரிமையாளர்

திருப்பதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து வீடு திரும்புவதற்குள் வீட்டின் உரிமையாளர், அவர்கள் வசித்த வீட்டுக்கு பூட்டு போட்ட சம்பவம் நடந்துள்ளது

  • News18
  • Last Updated: July 22, 2020, 3:09 PM IST
  • Share this:
திருப்பதியில் உள்ள சுந்தரையா நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் ஒருவருக்கும், அவருடைய மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

எனவே அவருடைய மனைவியை பரிசோதனைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அவருக்கு பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்த முகாமில் தங்க வைத்திருந்தனர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தன்னுடைய திருமணமான மகள்கள் இரண்டு பேருடன் வீடு திரும்பிய அந்த பெண் வீடு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வீட்டு உரிமையாளருடன் கேட்டபோது,

உங்கள் குடும்பத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே உங்களை வீட்டுக்குள் விட முடியாது என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.

Also read... 15 நாட்களில் சென்னையில் 10% மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கும் - சென்னை மாநகராட்சி ஆணையர்

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தலையிட்டு வீட்டு உரிமையாளருடன் பேசி அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு போடப்பட்டு இருந்த பூட்டை திறக்க செய்தனர்.இதன் காரணமாக தாய், மகள்கள் ஆகிய 3 பேரும் சுமார் 4 மணி நேரம் வீதியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading