ஹோம் /நியூஸ் /கொரோனா /

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய உணவு பொருட்களை இலவசமாக வழங்கிய உணவகம்...!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய உணவு பொருட்களை இலவசமாக வழங்கிய உணவகம்...!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கடலூர் மற்றும் புதுவையில் கொரோனா வைரஸ் எதிரொலி நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் பாரம்பரிய உணவு பொருட்களை உணவகம் வழங்கியுள்ளது.

கொரானோ வைரஸ் பரவாமல் இருக்க கடலூர் மற்றும் புதுவை ஆனந்தபவன் குரூப் சார்பில் பொதுமக்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய உணவு பொருட்களை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடலூர் மற்றும் புதுவை மாநிலம் காட்டுக்குப்பம் பகுதியில் உள்ள அனைத்து ஆனந்தபவன் ஹோட்டல் முகப்பு வாயிலில் சுக்கு காபி, வெற்றிலை, மிளகு, துளசி ஆகிய பாரம்பரியமான பொருட்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இதனை ஆனந்தபவன் குரூப் உரிமையாளர்கள் நாராயணன், ராம்கி நாராயணன் ஆகியோர் வழங்கி வருகிறார்கள். ஹோட்டல் ஆனந்த பவனுக்கு வரக்கூடிய பொதுமக்கள் பாரம்பரியமான உணவுப்பொருட்களை ஆர்வமுடன் கேட்டு வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர்.

மேலும் கொரானோ வைரஸ் போன்ற கொடிய நோய்கள் பரவாமல் இருக்க பொது நலனத்தோடு பாரம்பரியமான உணவு பொருட்களை வழங்கி வருவதற்கு பொதுமக்கள் கூறி நன்றி தெரிவித்ததோடு பாராட்டி சென்றனர்.

இதுகுறித்து ஆனந்தபவன் குரூப் உரிமையாளர்கள் நாராயணன், ராம்கி ஆகியோர் கூறுகையில், ”கொரானோ வைரஸ் தடுக்கும் விதமாக தமிழக அரசு மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதில் ஆனந்தபவன் குரூப் சார்பில் எங்கள் அனைத்து ஹோட்டல்களிலும் தமிழர் பாரம்பரிய உணவுப் பொருட்களான சுக்கு காபி, மிளகு, வெற்றிலை, துளசி ஆகியவற்றை இலவசமாக பொது மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வருகிறோம்.

இதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த உணவு பொருட்களை சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்வதற்கு எளிதாக இருக்கும். மேலும் எங்கள் ஹோட்டல்களில் இருக்கக்கூடிய பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வேலை செய்து வருகின்றனர்.

மேலும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவு வழங்கி வருகிறோம். இது மட்டுமன்றி கொரானோ வைரஸ் பரவாமல் இருக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆகையால் ஹோட்டல் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழர் பாரம்பரியமான உணவு பொருட்களை சாப்பிட்டு பயன்பெற வேண்டும்”  இவ்வாறு கூறினார்கள்.

Also see...

Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Cuddalore, Food