Home /News /coronavirus-latest-news /

Vijayakanth | விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியீடு..

Vijayakanth | விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியீடு..

Youtube Video

விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகிய இருவரின் உடல்நிலை சீராக உள்ளது, விஜயகாந்த் உடலில் கொரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லை என்று மருத்துவமனை அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இருவரது உடல்நிலை குறித்தும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க.. ஆயுதப்படைக் காவலர் வெட்டிக்கொலை: கிரிக்கெட் மோதல் காரணமா? கொலையாளிகள் யார்?



    விஜயகாந்துக்கு தற்போது தொற்று அறிகுறி இல்லை என்றும், தொடர் சிகிச்சையால் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், எனவே விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, DMDK, Premalatha Vijayakanth, Vijayakanth

    அடுத்த செய்தி