• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா நோயாளிகளிடமிருந்து அதிக கட்டண வசூல் புகார்: கொச்சியில் தனியார் மருத்துவமனை மீது வழக்கு

கொரோனா நோயாளிகளிடமிருந்து அதிக கட்டண வசூல் புகார்: கொச்சியில் தனியார் மருத்துவமனை மீது வழக்கு

மாதிரிப் படம்.

மாதிரிப் படம்.

கொச்சியில் உள்ள அன்வர் மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்கு நோயாளிகளிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து மருத்துவமனை மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

  • Share this:
    இது தொடர்பாக கொச்சி அலுவா கிழக்கு காவல் நிலைய அதிகாரி பி.எஸ்.ராஜேஷ் கூறும்போது, “மருத்துவமனை கொரோனா நோயாளிகளிடத்தில் மிக அதிகக் கட்டணம் வசூலித்ததாக பல புகார்கள் வந்ததையடுத்து நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிபிஇ கிட்களுக்கும் சேர்த்து ஏகப்பட்ட கட்டணம் தீட்டியுள்ளார்கள். விசாரணை செய்து வருகிறோம், மருத்துவமனை நிர்வாகத்தின் வாக்குமூலத்தையும் கேட்டிருக்கிறோம்.

    மேஜிஸ்ட்ரேட், தாசில்தார் ஆகியோரையும் அழைத்து விசாரித்து மாவட்ட கலெக்டருக்கு ரிப்போர்ட் அனுப்பக் கோரியிருக்கிறோம் என்றார்.

    ஆனால் போலீஸ் இந்த விவகாரத்தில் கேரளா பெருந்தொற்று நோய் ஆர்டினன்சை அழைக்கவில்லை, ஏனெனில் இவர்கள் பொதுவாக இது போன்ற கட்டணக்கொள்ளை விவகாரங்களில் அமைதி காக்கின்றனர், மற்ற விதிமீறல்களைத்தான் கண்காணிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைக் கொண்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதற்கு அரசு அனுமதி பெற வேண்டும்.

    புகார் என்னவெனில் மருத்துவமனையில் அளிக்கப்படும் வசதிகளுக்கும் தீட்டும் பில்களுக்கும் தொடர்பில்லை என்பதுதான். கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணங்களில் ஒரு படித்தான தன்மை இல்லை, அதனை அமல் செய்வதும் கடினமாக உள்ளது என்கின்றனர் போலீஸார்.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக தூண்டிவிடப்படுகிறது. என்று கூறுகிறது. மருத்துவமனையின் இப்போதைய நிர்வாகம் 2017-ல் இந்த மருத்துவமனையை 10 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ளது. அதாவது 2 ஆண்டுகளில் மருத்துவமனையையே வாங்குமாறு புரிந்துணர்வு உள்ளது. ஆனால் 2018 பெருவெள்ளம் அதை சாத்தியமாக்காமல் போக மருத்துவமனை உரிமையாளர் இவர்களை காலி செய்யக் கோரியுள்ளார், இது சட்ட மோதலில் வந்து முடிந்துள்ளது.

    இந்நிலையில்தான் மருத்துவமனையின் பில்தொகை குறித்து இரண்டு புகார்கள் எழுந்தன, ஒன்று உணவுச் செலவினம் சார்ந்தது, இன்னொன்று 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததற்கான 40 பிபிஇ கிட்கள் சம்பந்தமானது. டின்னர் சாப்பாட்டுக்கு மட்டும் ரூ.1,300 கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. 24 மணி நேரத்தில் அவர் கேட்ட உணவையெல்லாம் அளித்ததற்கான தொகையே அது.

    இன்னொருவர் பிபிஇ கிட்களுக்கு ரூ.40,000 பில் போட்டுக் கொடுங்கள் நான் அதனை மீண்டும் பெற முடியும் என்று கேட்டார், நாங்கள் அதை மறுத்தோம் என்கிறது மருத்துவமனை நிர்வாகம். சுகாதாரத்துறை எங்களிடம் இந்தப் புகார்கள் குறித்த விவரத்தைக் கேட்டனர், நாங்கள் அதை முறையாக அனுப்பிவைத்துள்ளோம் என்றார் மருத்துவமனை இயக்குநர் மனீஷ் பாபு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: