தனிமைப்படுத்தப்பட்டேனா...? இயக்குநர் பாரதிராஜா விளக்கம்
தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பாக என்.ஆர்.டி நகர் பகுதியில் உள்ள இயக்குநர் பாரதிராஜா வீட்டில், தனிமைப்படுத்தப்பட்ட நபர் உள்ள வீடு என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இயக்குனர் பாரதிராஜா
- News18 Tamil
- Last Updated: May 6, 2020, 3:17 PM IST
தன்னை யாரும் தனிமைப்படுத்தவில்லை என்றும், மக்கள் நலன் கருதி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்ற நிலையில், அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சென்னையில் இருந்து வந்ததால், பாரதிராஜாவை தேனி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அதோடு அவரது உதவியாளர்கள் 3 பேருக்கும் சோதனை நடத்தி தனிமைப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பாக என்.ஆர்.டி நகர் பகுதியில் உள்ள இயக்குநர் பாரதிராஜா வீட்டில், தனிமைப்படுத்தப்பட்ட நபர் உள்ள வீடு என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா, தன்னை யாரும் தனிமைப்படுத்த கூறவில்லை எனவும், மக்கள் நலன் கருதியே தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும், தற்போது மகிழ்ச்சியுடன் அடுத்த படத்திற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மூன்று முறை பரிசோதனை செய்ததில் மூன்றுமுறையும் நெகடிவ் தான் @offBharathiraja pic.twitter.com/7gQL95usM2
— Velmurugan Paranjothy/ ப.வேல்முருகன் (@Vel_Vedha) May 6, 2020
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா, தன்னை யாரும் தனிமைப்படுத்த கூறவில்லை எனவும், மக்கள் நலன் கருதியே தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும், தற்போது மகிழ்ச்சியுடன் அடுத்த படத்திற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
#StaySafeStayHome #COVID19 pic.twitter.com/GBEp4QcXMm
— Bharathiraja (@offBharathiraja) May 6, 2020