காதல் நெருக்கத்தை அதிகரித்த கொரோனா ஊரடங்கு - ஆணுறை விற்பனை அதிகரிப்பு

மாதிரி படம்

 • Share this:
  கொரோனா பரவலைத் தடுக்க வீட்டிலிருந்து பணியாற்ற அலுவலகங்கள் அனுமதித்துள்ள நிலையில், ஆணுறைகளின் விற்பனை அதிகரித்துள்ளது என்று மருந்தகங்கள் மற்றும் ஆன்லைன் ஆன்லைன் விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அதனையடுத்து, எடுக்கப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒருபகுதியாக ஐ.டி துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதித்துள்ளனர். இந்த கொரோனா பாதித்த காலத்தில் உணவு விற்பனை, மாஸ்க், மருந்துகளின் விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல, ஆணுறையின் விற்பனையும் அதிகரித்துள்ளது என்று தெரிகிறது.

  இந்தக் காலத்தில் வீட்டிலிருக்கும் காதல் தம்பதிகளுக்கு இடையில் தாம்பத்திய உறவும் அதிகரித்துள்ளது என்பது ஆணுறையின் விற்பனை அதிகரித்துள்ளதன் மூலம் தெரியவந்துள்ளது.

  கொரோனா பரவுதல் அச்சம் : உடலுறவில் ஈடுபடலாமா..? கருத்தரித்தல் நிகழலாமா..?


  தெற்கு டெல்லி பகுதியிலுள்ள லாயல் மருந்தக ஊழியர் ஷா நவாஸ் கூறும்போது, ‘எங்களுடைய மருந்தகத்தில் முகமூடி முழுவதும் விற்பனையாகிவிட்டது. மக்கள் பலர், குளோரோகுயின் மற்றும் விட்டமின்-சி மாத்திரைகளையும் வாங்குகின்றனர். அதேபோல, ஆணுறையின் விற்பனையும், கருத்தடை மாத்திரையின் விற்பனையும் அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தார்.

  கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணுக்களை பாதிக்குமா..? எச்சரிக்கை ரிபோர்ட்..!


  மத்திய டெல்லியிலுள்ள மருத்துவமனை ஊழியர் பேசும்போது, ‘கொரோனாவுக்கு மருந்தாக பரிசீலனை செய்யப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அதிக விற்பனை ஆகியுள்ளது. அதேபோல ஆணுறையின் விற்பனையும் கனிசமாக உயர்ந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

  அசைவம் சாப்பிடுவோரை விட சைவம் சாப்பிடுவோரின் தாம்பத்திய வாழ்க்கைதான் ஜம்முனு இருக்குமாம்..! ஆய்வில் தகவல்


  ஆன்லைன் விற்பனை இணையதளத்திலும், ‘ஆணுறையின் விற்பனையும் கருத்தடை மாத்திரையின் விற்பனையும் அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also see:
  Published by:Karthick S
  First published: