ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் வரலாறு!

குளோரோகுயின் மருந்து

குளோரோகுயின் மருந்து

2-ம் உலகப் போரில் மலேரியா பாதித்த வீரர்களுக்கு குளோரோகுயின் மருந்து தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 • Share this:
  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

  இந்த மருந்தின் வரலாற்றை திரும்பிப் பார்ப்போம்

  1630-ஆம் ஆண்டில் பெரு நாட்டில் வைஸிராய் ஒருவரின் மனைவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூலிகை வைத்தியர்கள் சின்கோன் என்ற இடத்தில் உள்ள மரத்தின் பட்டையில் இருந்து மருந்து தயாரித்து கொடுத்து குணப்படுத்தினர்.

  இதைத்தொடர்ந்து அந்த மரங்கள் பின்னாளில் சிங்கோனா மரங்கள் என்றும் அதில், காய்ச்சலை குணப்படுத்தக் கூடிய குயினைன் மூலக்கூறு இடம்பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

  அதன்பின் முன்னூறு ஆண்டுகள் கழித்து குயினைன் மூலக்கூறில் இருந்து குளோரோகுயின் என்ற மருந்தை கண்டுபிடித்தனர்.

  மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)


  இரண்டாம் உலகப் போரின்போது கொசுவால் பரவும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு குளோரோகுயின் மருந்து வழங்கப்பட்டது.

  அவ்வாறு குளோரோகுயின் மருந்தை பயன்படுத்திய வீரர்கள் பூரண குணமடைந்தனர். மேலும் வீரர்கள் சிலருக்கு ஏற்கனவே இருந்த முடக்குவாதம், மூட்டு வலி மற்றும் சரும நோய்களும் குணமடைவது தெரியவந்தது.

  அன்று முதல் முடநீக்கியல் பிரிவில் குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சையிலும் குளோரோகுயின் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  Also see...  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: