• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா சிகிச்சைக்கு பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

கொரோனா சிகிச்சைக்கு பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கும் அதிர்ச்சித் தகவல்கள் நியூஸ்18 தமிழ்நாடு கள ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

  • Share this:
    சென்னையில் கொரோனா பரவல் புதிய உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், சிகிச்சைக்காக பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி பல தனியார் மருத்துவமனைகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, களத்தில் இறங்கியது நியூஸ் 18 தமிழ்நாடு குழு.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க எவ்வளவு செலவாகும் என வானகரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்கப்பட்டது. ஒரு நாளைக்கு 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுவது தெரியவந்தது. அதேநேரத்தில் வெண்டிலேட்டர் பயன்படுத்தினால் செலவு லட்சத்தை எட்டும் எனக் கூறி அதிர்ச்சியளித்தார்.

    இது ஒருபுறமிருக்க, ராமாபுரத்தைச் சேர்ந்த மற்றொரு தனியார் மருத்துவமனை நிர்வாகமோ, நாளொன்றுக்கு 20 ஆயிரம் கட்டணம் என தெரிவித்தாலும், தனிப் படுக்கை வழங்குவதை உறுதிப்படுத்த முடியாது என தெளிவாகக் கூறிவிட்டது.

    ராமாபுரம் மருத்துவமனையில் கொரோனா பேக்கேஜ் என்ற பெயரில் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும், அதற்கு 14 நாட்களுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக அங்கு சிகிச்சை பெற்ற ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

    இந்தநிலையில்தான், அதிக கட்டணம் வசூலிக்கும் இதுபோன்ற மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

    மக்களின் உயிர் பயத்தை ஆதாயமாக்கி இதுபோன்ற நேரத்தில் பணம் சம்பாதிக்கும் இதுபோன்ற மருத்துவமனைகள் கண்காணிக்கப்படவேண்டும். நியாயமான மருத்துவ சேவை மக்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Also see...

    ஊரடங்கு முடிந்தால் என்ன பண்ணுவீங்க..? மக்கள் சொன்ன சுவாரஸ்யமான தகவல்கள்

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: