Home /News /coronavirus-latest-news /

கொரோனா பெருந்தொற்று: அபாயகரமாக அதிகரிக்க இருக்கும் குழந்தைத் தொழிலாளர் முறை...

கொரோனா பெருந்தொற்று: அபாயகரமாக அதிகரிக்க இருக்கும் குழந்தைத் தொழிலாளர் முறை...

child labour

child labour

ஆபத்து நிறைந்த தொழில் துறைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதன் போக்கு அபாயகரமாக அதிகரிக்கும் என குழந்தைகள் உரிமை அமைப்பான CRY தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனாவால் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கம், ஊரடங்கு விளைவுகள் என இந்த சிக்கல்களுக்கு பிறகு, விவசாயம் மற்றும் ஆபத்து நிறைந்த தொழில் துறைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதன் போக்கு அபாயகரமாக அதிகரிக்கும் என குழந்தைகள் உரிமை அமைப்பான CRY தெரிவித்துள்ளது.

    குழந்தைகள் வலுக்கட்டாயமாக குடும்பத்தின் பாரத்தைச் சுமக்க சிறு சிறு வேலைகளுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுவது மட்டுமின்றி, உழலும் குடும்பத்தின் துயர் துடைத்து ஒரு வேளை உணவுக்காக படிப்பை விட்டு வேலைகளைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு குழந்தைகளே தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது க்ரை அமைப்பு.

    குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணயத் தலைவர் ப்ரியங்க் கனூங்கு இதுகுறித்து பேசுகையில், ”குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து அனைத்து துறைகளிலும் பேசத் தொடங்குவதே இதற்கு நடைமுறையான வழி. குழந்தைகள் உரிமைகள் மட்டுமின்றி பெண்கள் முன்னேற்றம், பெண்கள் நலன், பொது சுகாதாரம், கல்வி என்னும் துறைகளில் கவனம் செலுத்தும்போதுதான் குழந்தைகளின் உரிமைகளையும் நலன்களையும் நம்மால் உறுதிசெய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Gunavathy
    First published:

    Tags: Child Abuse, Child Labour

    அடுத்த செய்தி