உலகின் சில நாடுகளில் கொரோனாவின் முதல் அலை தாக்கத் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உலகின் மிகப்பெரிய தேடல் என்ஜின் கூகுள் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்த தகவல் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. குறிப்பாக, கோவிட்-19 தாக்கம் உலகம் முழுவதிலும் தீவிரமாக பரவி இருந்த நிலையில், எந்த ஊரில், எந்த இடத்தில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களிடம் என்ன அறிகுறிகள் காணப்பட்டன, எவ்வளவு நபர்கள் மீண்டு வந்தனர் என்று அனைத்து தகவல்களையும் கூகுள் தேடல் வழியே கிடைத்தது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையிலும், இன்னும் முழுவதுமாக நீங்கி விடவில்லை. அது மட்டுமின்றி, அவ்வப்போது கொரோனா வைரஸ் உருமாறி புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு ஏற்றார் போல, அதன் அறிகுறிகளும் மாறின. சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலேயே தொற்று பாதிப்பு ஏற்பட்டு, மீண்டு விட்டனர். கொரோனா வைரஸ் உருமாற்றம், அறிகுறிகள், பரிசோதனை, அதற்குரிய சிகிச்சை மற்றும் தொற்று பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி என்பதைப் பற்றிய அப்டேட்டை அவ்வப்போது கூகுள் வழங்கியுள்ளது.
தற்போது புதிய அப்டேட்டாக, கோவிட்-19 தடுப்பூசி பற்றிய தகவல்களையும் நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல்கள் அனைத்தும் உலக சுகாதார மையம் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான மருத்துவ ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது.
கூகுள் தேடலில் கொரோனா வைரஸ் என்று டைப் செய்தவுடன் உங்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய அறிகுறிகள், தடுப்பு முறை, பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவை பல்வேறு தாவல்களில் (tab) டிஸ்ப்ளே ஆகும். உதாரணமாக உங்களுக்கு கோவிட் வைரஸ் சிகிச்சை பற்றி தெரிய வேண்டுமென்றால் சிகிச்சை (treatment) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
Must Read | மாரடைப்பு ஆண்களுக்கு அதிகமா? பெண்களுக்கா? அலர்ட் கொடுக்கும் புள்ளி விவரம்!
கோவிட் நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் விவரங்கள் மட்டுமன்றி தடுப்பூசி போடுவதற்கான அப்பாயின்மெண்ட்டையும் நீங்கள் கூகுள் தேடலிலேயே தெரிந்துகொள்ளலாம். “எனக்கு அருகில் இருக்கும் கோவிட் தடுப்பூசி மையம்” என்பதை நீங்கள் தேடினால் கூகுள் சர்ச் அல்லது கூகுள் மேப்ஸ் அல்லது கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய கூகுள் தேடு பொறிகளில் ஏதேனும் ஒன்று நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் தடுப்பூசி மையத்தை பற்றிய தகவல் மற்றும் முகவரிகளை உங்களுக்கு அளிக்கும்.
அது மட்டுமின்றி உங்களுக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது ஊரில் தடுப்பூசி பற்றிய தகவல் வேண்டும் என்றாலும் அதையும் நீங்கள் கூகுள் தேடல் வழியே கண்டறியலாம். தடுப்பூசி மையத்தை தேர்வு செய்து, பின்வரும் தகவல்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் தேர்வு செய்த தடுப்பூசி மையத்தில் என்ன வகையான தடுப்பூசி வழங்கப்படுகிறது, அப்பாயின்மெண்ட் பற்றிய விவரங்கள், உங்களுக்கு வசதியான நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஸ்லாட்டுகள் இருக்கின்றனவா, மற்றும் விலை ஆகிய தகவல்கள் உங்களுக்கு டிஸ்ப்ளே ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19, Google