• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நாளை முதல் ஊரடங்கு - சென்னை ரிச்சி தெருவில் பொதுமக்கள் அலைமோதல்

நாளை முதல் ஊரடங்கு - சென்னை ரிச்சி தெருவில் பொதுமக்கள் அலைமோதல்

ரிச்சி தெருவில் அலைமோதிய கூட்டம்.

ரிச்சி தெருவில் அலைமோதிய கூட்டம்.

செல்போன் லேப்டாப் சர்வீஸ் செய்வதற்காக சென்னை ரிச்சி தெருவில் வழக்கத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு கூட்டம் அலைமோதியது.

  • Share this:
சென்னையில் நாளை முதல் 12 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. தற்போதைய சூழலில் பெரும்பாலான ஐடி மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள். அதே போன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதனால் செல்போன் மற்றும் லேப்டாப் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை பழுது நீக்குவதற்காக ரிச்சி தெருவில் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து சென்றனர். சமூக இடைவெளி எதுவும் இல்லாமல் திரளாக மக்கள் கூடினர்.

வருமானம் அதிகளவில் வருவது குறித்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் நோய்த்தொற்று வந்துவிடுமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால் வந்து செல்லும் பொதுமக்கள் அதைப் பற்றி கவலை கொள்கிறார்களா? எனும் கேள்வி எழுகிறது.

Also see:

வழக்கமாக எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதற்காக ரிச்சி தெருவில் மக்கள் அதிக அளவில் கூடுவதுண்டு. நாளை முதல் கடைகள் 12 நாட்களுக்கு இருக்காது என்பதால் இன்று கூட்டம் அலைமோதியது. அதுவும் 12 நாட்களுக்குப் பின்னரும் ஊரடங்கு ஒருவேளை நீட்டிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் மக்களிடம் இருப்பது இந்தக் கூட்டத்திற்கான காரணமாக இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: