35 சதவிகித மக்கள் மாஸ்க் அணிவதில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கொரோனா சாதாரண காய்ச்சல் என நினைத்து மக்கள் மாஸ்க் அணியாமல் இருக்கிறார்கள் எனவும், மாஸ்க் அணியாமல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

35 சதவிகித மக்கள் மாஸ்க் அணிவதில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
  • News18
  • Last Updated: October 9, 2020, 5:25 PM IST
  • Share this:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் நடந்த மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர்,  கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடந்ததால், தமிழகம் முழுவதும் தொற்று உறுதி ஆகும் சதவீதம் குறைந்திருக்கிறது.

சென்னையில் ஒரு சில பகுதிகள் மற்றும் கோவை, சேலம், தஞ்சாவூர், கடலூர் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், மக்களிடம் மாஸ்க் பயன்படுத்துவது குறைந்து வருவதால், அபராதம் விதிப்பதோடு, அனைத்து மாவட்டங்களிலும், நோய் தொற்றை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா அறிகுறி வந்தவுடன் பரிசோதனை செய்துகொண்டால் தான், நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வழிகளை பின்பற்றாத போது, தொற்று அதிகரிக்கிறது.


Also read... எச்சரிக்கையாக இருங்கள்...! சென்னையில் வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

இறப்பு, விருந்து, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது தொற்று ஏற்படுகிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம். மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் வடசென்னை பகுதிதான் எடுத்துக்காட்டாக செயல்பட்டு, கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சாதாரண காய்ச்சல் என நினைத்து மக்கள் மாஸ்க் அணியாமல் இருக்கிறார்கள் எனவும், மாஸ்க் அணியாமல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் நிலையும் தொடர்கிறது. 35 சதவிகித மக்கள் மாஸ்க் அணியாத நிலை இருக்கிறது என்று தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.
First published: October 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading