சேலம் இரும்பாலை வளாகத்தில் மேலும் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை அமைக்கும் பணிகளை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் நோய் கட்டுபாட்டு நடவடிக்கை, அடிப்படை கட்டமைப்பு என இரண்டு பிரிவாக நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 17 மாவட்டங்களில் நோய் பரவல் குறைந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழகத்தில் படிப்படியாக நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் கவன குறைவாக இருக்க கூடாது. கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக உரிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும்.
அடுத்த அலையை எதிர்கொள்ள 13 நபர்கள் கொண்ட தனிக்குழுவை அமைத்துள்ளார் முதலமைச்சர். கொரோனா மற்றும் கொரோனா அல்லாத இறப்பு நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். மே மாதம் முதல், இரண்டாவது வாரத்தில் பெரும் சவாலாக இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது போதுமான கையிருப்பில் உள்ளது. அமுமட்டுமின்றி மேற்கொண்டு ரிசர்வும் செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில்
கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் கூடுதலாக வாங்கும் பணத்தை மருத்துவமனையிடம் இருந்து பொதுமக்களுக்கே திருப்பி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த
தடுப்பூசி செலுத்தும் பணிக்கு முக்கியத்துவம் அளிப்பட்டு வருகின்றது. இது வரையில் 95.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 1.52 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. ஓரிரு நாளில் மேலும், கூடுதலாக தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், 843 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
Must Read : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல்
இந்நிலையில், சேலத்தில் உள்ள இரண்டு தனியார்
கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மீது தொடர் புகார்கள் வந்ததால், ஐந்து ரோடு மற்றும் சாரதா கல்லூரி சாலையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்த ஆய்வகத்திற்குச்சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் விதிகளை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சில தினங்களுக்க முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.