கொரோனா தடுப்பூசி இல்லை என கூறிய சுகாதாரத்துறை அதிகாரிகள்... ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

கொரோனா தடுப்பூசி இல்லை என கூறிய சுகாதாரத்துறை அதிகாரிகள்... ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருந்த மக்கள்

கொரோனா தடுப்பூசி இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

  • Share this:
    சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி .ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. இன்று காலையிலும் கொரோனாதடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காலை ஆறு மணியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வயதானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் காலை 9 மணிக்கு வந்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று கொரோனா தடுப்பூசி இருப்பில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருந்த மக்கள்


    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட தொடங்கினர். பொதுமக்கள் அரைமணிநேரத்திற்கு மேலாக சாலையில் அமர்ந்ததால் போலீசாரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் டோக்கன் விணியோகிக்கப்பட்டு காத்திருந்த 300 நபர்களுக்கும் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

    மேலும் படிக்க... Exclusive | தமிழகத்தில் தடையில்லாமல் தடுப்பூசி போடப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: