மதுரையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - சிறப்பு மருத்துவக் குழு அமைப்பு

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பெருந்தொற்றை கட்டுப்படுத்த மதுரைக்கு சிறப்பு மருத்துவ வல்லுநர் குழு அனுப்பப்பட உள்ளது.

மதுரையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - சிறப்பு மருத்துவக் குழு அமைப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
மதுரையில் நிலைமையைக் கண்காணிக்கவும் சென்னையில் விரிவு படுத்தப்பட்ட சிகிச்சை முறையை மதுரையிலும் பின்பற்றவும் சிறப்பு மருத்துவக் குழுவை தமிழக சுகாதாரத்துறை நியமித்துள்ளது.

இந்த மருத்துவக் குழுவில் நெஞ்சக சிறப்பு மருத்துவர் மகிழ்மாறன், சிறப்பு பொதுமருத்துவர் கீதா, சிறப்பு பொது மருத்துவர் சுலைமான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்தக் குழு மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகள் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்ய உள்ளது.

Also read: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்


மேலும், சென்னையில் பின்பற்றும் சிகிச்சை முறைகளை மதுரையிலும் விரிவு படுத்த உள்ளனர். மதுரையில் இதுவரை 6,539 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதோடு, மொத்தம் 120 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading