திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்: என்ன சொல்கிறது மருத்துவமனை அறிக்கை?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்: என்ன சொல்கிறது மருத்துவமனை அறிக்கை?
ஜெ. அன்பழகன்
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்

இதனிடையே, கடந்த 2 நாட்களாக அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், நேற்று முன்தினம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக சென்றார்.


அப்போது, கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்

ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளால் அன்பழகன் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மாஸ்க் வழியே ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், நேற்று 80 சதவிகித ஆக்சிஜன் வெண்டிலேட்டர் வழியே செலுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது 20% சதவிகிதம் குறைக்கப்பட்டு 60 சதவிகித ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.


 
First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading