கொரோனா தடுப்பு நடவடிக்கை... தலைமைச் செயலாளர் தலைமையில் ’டாஸ்க் போர்ஸ்’ குழு!

கொரோனா தடுப்பு நடவடிக்கை... தலைமைச் செயலாளர் தலைமையில் ’டாஸ்க் போர்ஸ்’ குழு!
  • Share this:
தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகள், டாஸ்மாக் பார் உள்ளிட்டவைகளை மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று உத்தரவிட்டார்.

முன்னெச்சரிக்கை பணிகளை செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். பின்னர், தலைமைச் செயலாளர் தலைமையில் பல்துறை செயலாளர்கள், காவல் இயக்குனர், ரயில்வே, விமான நிலைய மேலாளர்கள் அடங்கிய 18 பேர் கொண்ட "டாஸ்க் போர்ஸ்" என்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது.


அதில், அரசு தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தொழிலாளர் நலத்துறை, தொழில்துறை, போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்ப துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், காவல்துறை இயக்குனர், தென்னக ரயில்வே, துறைமுகம், விமான நிலையம், மருத்துவ கல்வி இயக்குநர்களும் இந்த குழுவில் இடம்பெற்ற உள்ளனர்.

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தி, கொரோனா பாதிப்பை முழுமையாக தவிர்ப்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி கண்காணிக்கும் பணியை இந்த குழு மேற்கொள்ளும்.Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading