கொரோனாவால் இறந்த தாயின் உடலை ஜன்னலில் அமர்ந்து பார்த்த மகன் - இதயத்தை ரணமாக்கும் புகைப்படம்

கொரோனாவால் இறந்த தாயின் உடலை மருத்துவமனையின் ஜன்னலில் அமர்ந்து பார்க்கும் மகனின் புகைப்படம் பார்ப்பவர்களின் இதயத்தை ரணமாக்கி உள்ளது.

கொரோனாவால் இறந்த தாயின் உடலை ஜன்னலில் அமர்ந்து பார்த்த மகன் - இதயத்தை ரணமாக்கும் புகைப்படம்
ஜிகாத்
  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் செய்வது அறியாமல் ஸ்தம்பித்து உள்ளது. கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகளின் சோகம் என்றும் மறையாத வடுவாகவே உள்ளது.

அதுபோன்ற சோகமான நிகழ்வு ஒன்று பாலஸ்தீன நாட்டில் அரங்கேறி உள்ளது. மேற்கு கரையில் பீட் ஆவா பகுதியை சேர்ந்த இளைஞர் ஜிகாத் அல் ஸ்வைட்டி.73 வயதான இவரது தாய் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா சிகிச்சை பெற்று வரும் தாயை பார்க்க அவரது மகன் ஜிகாத் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் அவரது தாயார் இறந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ஜிகாத் கதறி அழுது உள்ளார்.

படிக்க: கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சகோதரியை டான்ஸ் ஆடி வரவேற்ற இளம்பெண் - வீடியோ

படிக்க: ”மீண்டு வந்து நன்றி சொல்வேன்” - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வட்டாட்சியரின் உருக்கும் பதிவை பகிர்ந்து வருந்தும் ஊர்மக்கள்..


கொரோனாவால் இறந்த அவரது தாயின் உடலை ஜிகாத்துக்கு நேரில் கூட பார்க்கவில்லை. அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவரது தாயின் உடலை பார்க்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

இதனால் மனமுடைந்த ஜிகாத் அங்கிருந்து ஜன்னலில் ஏறி தனது இறந்த தாயின் உடலை பார்த்து அழுதுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.இறந்த தாயின் உடலை கூட பார்க்க முடியாத அளிவிற்கு கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. தாய் மீது மகன் வைத்திருக்கும் பாசப்போராட்டத்தை உணர்த்தும் இந்த புகைப்படம் பார்ப்வர்களின் இதயத்தை ரணமாக்கி உள்ளது.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading