• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சிறைக்கைதிகள் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உள்ளது..? அரசிடம் அறிக்கை கேட்கும் நீதிமன்றம்

சிறைக்கைதிகள் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உள்ளது..? அரசிடம் அறிக்கை கேட்கும் நீதிமன்றம்

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஒரே காரணம் குடும்பத்தில் அனைவரும் நெருங்கியத் தொடர்பில் இருப்பதே என்கிறது. அதிலும் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று பரவுதல் என்பது குறைவாக உள்ளது என்கிறார் சோய் யங் ஜுன். இவர் ஹல்லீம் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஒரே காரணம் குடும்பத்தில் அனைவரும் நெருங்கியத் தொடர்பில் இருப்பதே என்கிறது. அதிலும் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று பரவுதல் என்பது குறைவாக உள்ளது என்கிறார் சோய் யங் ஜுன். இவர் ஹல்லீம் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.

தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
கடலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சரவணன் என்பவருக்கு ஆறு வாரம் பரோல் கேட்டு அவருடைய மனைவி சங்கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது சிறைகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும் சிறைக்கைதி சரவணனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக சிறைகளில் இதுவரை எத்தனை கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எத்தனை கைதிகளுக்கு எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, எத்தனை பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறித்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also read... வைகோ சொந்த ஊரில் வெட்டுக்கிளிகள்... கலெக்டரிடம் புகார்






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: