கொரோனா அச்சம்... பள்ளி தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கொரோனா அச்சம்... பள்ளி தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா பாதிப்பினால் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பயன்படுத்தப்படும் கிருமி நாசினி மற்றும் முக கவசம் அதிக விலைக்கு விற்கப்படுவதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுகாதார துறை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


அதில், இதுவரை 222 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும், 3 பேருக்கு அறிகுறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 54 பேரின் மாதிரிகள் சோதனையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிடம் தற்போது சுமார் 19.30 லட்சம் முக கவசங்கள் இருப்பில் உள்ளதாகவும், பள்ளிகள் மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உதவும் வகையில் கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு 044-29510500, 044-29510400, 9444340496, 8754448477 மற்றும் 104 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எஃப்.எம். விளம்பரங்கள் மூலமும் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை தமிழகத்திற்கு வந்த சுமார் 2 லட்சம் பயணிகளில் 2984 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சானிடைசருக்கான மூலப்பொருள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், அதை நிறுத்திவைத்துள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்ய எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சானிடைசருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10,11,12- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால், தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மார்ச் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also see...
First published: March 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading