ஐபிஎல் போட்டிகளின் போது கொரோனா பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை? பிசிசிஐ-க்கு நீதிமன்றம் கேள்வி!

ஐபிஎல் போட்டிகளின் போது கொரோனா பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை? பிசிசிஐ-க்கு நீதிமன்றம் கேள்வி!
ஐபிஎல் 2020
  • Share this:
ஐபிஎல் போட்டிகளின் போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய பிசிசிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில், மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சீகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரு 1,22,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளது.


இதன் காரணமாக 150 ஆண்டுகால பழமையான இத்தாலி கால்பந்து லீக் போட்டிகள் உட்பட 10-ற்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மார்ச் 29-ம் தேதி தொடங்கி மே 4-ம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், அது மற்றவர்களுக்கும் வேகமாக பரவும் அபாயம் இருப்பதால் ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியா கிரிக்கெட் வாரியம் தரப்பில், இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒரு நாள் போட்டி உட்பட பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைப்பதா, போட்டிகளின் போது மைதானத்திற்கு வரும் ரசிகளர்களை தெர்மல் ஸ்கேனரை கொண்டு சோதிப்பதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி தெரிவிப்பதாக கூறப்பட்டது.

இதனையடுத்து, ஐபிஎல் போட்டிகளின் போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய பிசிசிஐ-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also see...
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்