• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பல வகைகளில் விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த முகக்கவசங்கள்: விதிமுறைகளை உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

பல வகைகளில் விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த முகக்கவசங்கள்: விதிமுறைகளை உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

கோப்புப் படம்

கோப்புப் படம்

முகக்கவசங்களுக்கான உற்பத்தி, விற்பனை, தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    முகக்கவசங்களுக்கான உற்பத்தி, விற்பனை, தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கொரொனோ வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ள முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.

    இதன் அடிப்படையில், 3 லேயர் மாஸ்க், n95 மாஸ்க், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மாஸ்க், காட்டன் மாஸ்க் மற்றும் வெட்டி வேரால் செய்யப்பட்ட மூலிகை மாஸ்க் வரை பல மாஸ்க்குகள் விற்கப்படுகின்றன.

    இதுமட்டுமல்லாமல் தங்களுடைய முகங்கள் போல் மாஸ்க்கில் அச்சிட்டு அதை பயன்படுத்தும் வகையிலும் மக்களை கவரும் வகையிலும் பல விதமான மாஸ்க்குகள் அறிமுகமாகியுள்ளன.

    ஆனால் எந்த முகக்கவசங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், அதன் விலை, தரம் மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனம், முக கவசம் காலவதியாகும் தேதி போன்ற எந்த விதிகளையும் மத்திய, மாநில அரசுகள் இது வரை உருவாக்கவில்லை.

    இதன் காரணமாக பல வண்ணங்களில் சாலைகளில் திறந்தவெளியில் மாஸ்க்குகளை விற்கிறார்கள். இதை வாங்கும் மக்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    எனவே எந்தெந்த முகக்கவசத்தை எந்தெந்த வயதினர் அணிய வேண்டும், உற்பத்தி, விலை, தரம், காலாவதி காலம் உள்ளிட்டவை குறிப்பிட்டு முகக்கவசத்திற்கான விதிமுறைகளை வெளியிடும் வரை முகக்கவசம் அணியாமல் செல்பவரிடம் அபராதம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், முகக்கவசத்தை பயன்படுத்திய பின்னர் அதை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாணவர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

    இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, முக கவசம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு என விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

    Also read... வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? உயர்நீதிமன்றம் கேள்வி...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: