தடுப்பூசி போட்ட நிலையில், சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

தடுப்பூசி போட்ட நிலையில், சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

சுகாதாரத்துறை அமைச்சர் அணில் விஜ்

கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிக்கு தனது மாநிலத்தில் முதல் தன்னார்வலராக இருப்பார் என்று அவர் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

 • Share this:
  ஹரியானாவில் கொரோனா தடுப்பூசி கோவக்சின் போட்டுக் கொண்ட சுகாரதார அமைச்சர் அணில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  நவம்பர் 20 ஆம் தேதி, ஹரியானாவின் சுகாதார அமைச்சரான அணில் விஜ், பாரத் பயோடெக்கின் கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனையின் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் தடுப்பூசியினை எடுத்துக் கொண்டார். கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிக்கு தனது மாநிலத்தில் முதல் தன்னார்வலராக இருப்பார் என்று அவர் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

  இந்நிலையில் அமைச்சர் விஜ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு, பரிசோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.  மருத்துவ பரிசோதனையில் கோவிக்ஸின் முதல் இரண்டு கட்டங்களில் சுமார் 1000 பேருக்கு சோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: