சிகிச்சைக்கு வரும்போதே ஆக்சிஜன் சிலிண்டர்களையும் சுமந்து வரவேண்டிய அவலம்; ஹர்ஷவர்தன் பதவி விலக வேண்டும்: ப.சிதம்பரம் காட்டம்

சிகிச்சைக்கு வரும்போதே ஆக்சிஜன் சிலிண்டர்களையும் சுமந்து வரவேண்டிய அவலம்; ஹர்ஷவர்தன் பதவி விலக வேண்டும்: ப.சிதம்பரம் காட்டம்

ப.சிதம்பரம்

கொரோனா வைரஸ் 2-வது அலையால் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து தடுக்க முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  கொரோனா வைரஸ் 2-வது அலையால் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து தடுக்க முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

  கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும்போதே தங்களுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களையும் சுமந்து வர வேண்டிய துர்பாக்கிய நிலைக்குக் காரணமான மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் மனசாட்சி உள்ளவராக இருந்தால் பதவி விலக வேண்டும் என்று காட்டமாகக் கூறியுள்ளார் ப.சிதம்பரம்.

  நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாள்தோறும் பல கரோனா நோயாளிகள் பல்வேறு மாநிலங்களில் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் சப்ளையைச் சீரமைக்க மத்திய அரசும் போராடி வருகிறது.

  இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

  2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கொரோனா குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாடாளுமன்ற நிலைக்குழுவும் எச்சரிக்கை விடுத்தது.

  ஆனால், 2-வது அலை குறித்து தெரிந்தும், நேற்றுவரை ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஒட்டுமொத்த மற்றும் மிக மோசமான அலட்சியப் போக்கு இல்லையா? இதற்கு ஒருவர் கூட பொறுப்பேற்க மாட்டீர்கள். இதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும், சுகாதாரத்துறைச் செயலாளரும் பதவி விலக வேண்டாமா?

  மருத்துவமனையில் தங்களின் அன்புக்குரியவர்களை சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு, மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். தங்கள் உறவினர்களுக்க சிகிச்சை அளிக்கக் கோரி மருத்துவர்களிடம் மன்றாடுகிறார்கள். நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்துவரும் போது, தங்கள் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரைக் கட்டிக்கொண்டு செல்கிறார்கள்.

  ஆக்சிஜன் சப்ளையைச் சரிசெய்யக் கோரி மருத்துவமனைகள் நீதிமன்றம் நோக்கி ஓடுகின்றன. உண்மையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் அவர் பதவி விலக வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார் ப.சிதம்பரம்.
  Published by:Muthukumar
  First published: