கடந்த 7 நாட்களில் நாட்டின் 147 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் பெரும்பாலும் கொரோனா பாதிப்புகள் 70% மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும்தான் அதிகம் உள்ளன. பிரிட்டனில் உருவான புதிய வகை கொரோனா 153 பேரைத் தொற்றியுள்ளது என்கிறார் ஹர்ஷ வர்தன்.
கடந்த 7 நாட்களில் 147 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் இல்லை. 18 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக புதிய பாதிப்பு இல்லை. 6 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களாகவும் 21 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் கொரோனா தொற்று இல்லை.
மகாராஷ்டிராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்து 13 ஆயிரத்து 353 ஆகும். கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 899,932 ஆகும். இந்திய கொரோனா பாதிப்பில் அடுத்தடுத்து பங்களிப்பு செய்யும் மாநிலங்களில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளது.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் 11,666 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 7 லட்சத்து ஆயிரத்து 193 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 153,847 ஆக அதிகரித்துள்ளது, காரணம் 123 பேர் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளனர்.
நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பில் சிகிச்சை எடுத்துக் கொள்வோர் எண்ணிக்கை 1,73,740, குணமடைந்தோர் எண்ணிக்கை 1,03,73,606 ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை 23 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.