இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவு- ஹர்ஷ் வர்தன்

இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவு- ஹர்ஷ் வர்தன்

ஹர்ஷ் வர்தன்

போதுமான மருத்துவ உபகரனங்கள் கையிருப்பில் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு என்று கூறினார்.

  நாடு முழுவதும் 2ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கிய நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடக்கும் ஒத்திகையை ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கொரோனா பரவ தொடங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்பு பணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்ததாக கூறினார்.

   

  மேலும் படிக்க... கொரோனா தடுப்பூசி: எங்கிருந்து வரும்? எப்படி உங்கள் ஊருக்கு வரும்? 

   

  மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு என்றும், இந்தியாவில் 2,300 மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது என்றும் கூறிய ஹர்ஷ் வர்தன் தடுப்பூசி கண்டுபிடிக்க மட்டுமின்றி, அதனை உரிய முறையில் செலுத்தவும் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

  மேலும், போதுமான மருத்துவ உபகரனங்கள் கையிருப்பில் இருப்பதாகவும் ஹர்ஷ் வர்தன் அப்போது தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: