• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • குருவாயூர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் இன்று முதல் ரத்து

குருவாயூர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் இன்று முதல் ரத்து

குருவாயூர் கோயில்

குருவாயூர் கோயில்

குருவாயூர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக, தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்

  • Share this:
    குருவாயூர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக, தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்

    கொரோனா நோய் பரவலை தடுப்பதின் ஒருபகுதியாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதையொட்டி அனைத்து புனித ஸ்தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த குருவாயூர் கோயில் 80 நாட்களுக்குப் பிறகு ஜூன் 5 ஆம் தேதி திறக்கப்பட்டது. அப்போது கொரோனா பரவல் காரணமாக திருச்சூர் மாவட்டமும், அருகில் உள்ள சவக்காட் பகுதியும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து, குருவாயூர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக, தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார். அதேபோல், திருமண நிகழ்ச்சிகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க...

    தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைபெய்யும்: வானிலை ஆய்வு மையம்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: