புலிமேடு கிராமத்தில் ஊரடங்கு இருக்கும் போது கள்ளச்சாராயம் தாராளமாக விற்கப்பட்டதால் தட்டிகேட்ட ஊர் மக்கள் மீது சாராய வியாபாரிகள் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஊசூர் அருகேயுள்ள புலிமேடு கிராமத்தில் ஊரடங்கு அமுலில் இருப்பதால் இளைஞர்கள் ஊருக்குள் வெளிநபர்கள் வரக்கூடாது என தடுத்து வந்துள்ளனர். இதில் அல்லேரி மலைப்பகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் புலிமேடு கிராமத்தில் தொடர்ந்து சாராய வியாபாரம் செய்து வந்தனர்.
தற்போது கொரோனா தொற்றுள்ளதால் இந்த பகுதியில் சாராயம் விற்க வேண்டாம் மக்கள் தடுத்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் 3 நாட்டு துப்பாக்கிகளுடன் வந்து கிராம இளைஞர்களை சரமாரியாக சுட்டனர்.
இதில் பூபாலன்,சங்கர், அண்ணாமலை ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்தவர்கள் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது ஊரடங்கு உள்ளதால் கொரோனா வைரஸ் கள்ளச்சாராயம் மாவட்ட அளவில் இங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது. இது குறித்து அரியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் மக்களை நாட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய 7 பேர் கொண்ட கள்ளச்சாராய கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also see....
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.