போலி கிருமிநாசினிகள் தயாரித்து வந்த குஜராத் மாநிலத்தவர்கள் கைது..!

விசாரணையில் மாதாவரம் அடுத்துள்ள வடபெரும்பாக்கத்தில் இவர்கள் தனியான ஒரு குடோனில் போலி கிருமிநாசினி மருந்துகள் செய்து வந்தது தெரியவந்தது.

போலி கிருமிநாசினிகள் தயாரித்து வந்த குஜராத் மாநிலத்தவர்கள் கைது..!
போலி கிருமிநாசினிகள்
  • Share this:
போலி கிருமிநாசினிகள் தயாரித்து வந்த குஜராத் மாநிலத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா நோய் தமிழகத்தில் பரவத் தொடங்கிய நாள் முதல் கிருமிநாசினியான டெட்டால், லைசால், ஹார்பிக் போன்ற கிருமி நாசினி பொருட்கள் மருந்து கடைகளில் கிடைப்பதற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த கிருமிநாசினி பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதுக்கு உள்ளாகி வந்தனர். சென்னையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மெடிக்கல் கடைகளில் டெட்டால், லைசால், ஹார்பிக் போன்ற கிருமி நாசினி பொருட்கள் தட்டுப்பாடு இருந்த நிலையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஜாம்பஜார் போன்ற பகுதிகளில் உள்ள பல மெடிக்கல் கடைகளில் இந்த அத்தியாவசிய கிருமிநாசினிகளுக்கு தட்டுப்பாடு சில நாட்களுக்கு முன்பு வரை ஏற்படவில்லை.


இதனால் டெட்டால், லைசால், ஹார்பிக் போன்ற கிருமிநாசினிகள் விற்பனை செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்கள் ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஜாம்பஜார் போன்ற பகுதிகளில் உள்ள மெடிக்கல் கடைகளில் எவ்வாறு தட்டுப்பாடு ஏற்படவில்லை என சந்தேகம் எழுந்தது.

இதனால் மொத்த மருந்து வியாபாரிகள் இப்பகுதிகளில் உள்ள மெடிக்கல் கடைகளுக்கு நேரடியாக சென்ற பொழுது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மெடிக்கல் கடைகளில் டெட்டால், லைசால், ஹார்பிக் போன்றவைகள் அளவுக்கு அதிகமாகவே இருந்துள்ளன. அவற்றை வாங்கிப் பார்த்தபோது இவைகள் அனைத்தும் உண்மை போலவே இருக்கும் போலியான மருந்துகள் என மருந்து வியாபாரிகள் கண்டறிந்து மெடிக்கல் கடைகளில் தகவலை கூறியுள்ளனர்.இதனையடுத்து மெடிக்கல் கடைகளில் இந்த பொருட்களை சப்ளை செய்த நபர்களின் தொடர்பு எண்ணை மொத்த மருந்து வியாபாரிகள் வாங்கி போலி கிருமி நாசினிகளை சப்ளை செய்யும் நபர்களிடம் பேசியுள்ளனர். மேலும் இது குறித்து அறிவுசார் சொத்துரிமை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை செய்த போலீசார் போலி கிருமிநாசினி மருந்துகள் ராயப்பேட்டை பி.எம் தெருவிலுள்ள ஜினால் எண்டர்பிரைசஸ் என்ற அலுவலகத்திலிருந்து சப்ளை செய்யப்பட்டுள்ளது என கண்டறிந்தனர்.

இதுதொடர்பாக ஜினால் எண்டரிரைசஸ் என்ற பெயரில் போலி கிருமிநாசினி மருந்துகளை தயாரித்து வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த துளசி நாது சிங்(25), ராஜேஷ்கண்ணா (29) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாதாவரம் அடுத்துள்ள வடபெரும்பாக்கத்தில் இவர்கள் தனியான ஒரு குடோனில் போலி கிருமிநாசினி மருந்துகள் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கிருமிநாசினி மருந்துகளான டெட்டால், லைசால் ஹார்பிக் மற்றும் டாபர், கோத்ரேஜ், ரெக்கிட்  பென்கிசர் போன்ற பொருட்களின் போலி தயாரிப்பு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான மருந்து அட்டைகள், ஸ்டிக்கர், முத்திரைகள் போன்றவற்றை அறிவுசார் சொத்துரிமை போலீசார் பறிமுதல் செய்தனர். டெட்டால், லைசால், ஹார்பிக் போன்ற கிருமி நாசினி பொருட்களை செய்வதற்கு இவர்கள் சோப்பு கரைசல், நிறமூட்டி, மணமூட்டி போன்ற சாதாரண பொருட்களையே பயன்படுத்தி போலி கிருமிநாசினிகள் தயாரித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் முக்கிய குற்றவாளியான குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் பட்டேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading