குஜராத்தில் மருத்துவமனையில் தீ விபத்து: கொரோனா நோயாளிகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் மருத்துவமனையில் தீ விபத்து: கொரோனா நோயாளிகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு

குஜராத்

குஜராத் மாநிலத்தில், கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா  நோயாளிகள் உட்பட 18 பேர்  உடல் கருகி உயிரிழந்தனர். 

 • Share this:
   குஜராத் மாநிலத்தில், கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா  நோயாளிகள் உட்பட 18 பேர்  உடல் கருகி உயிரிழந்தனர். 

  குஜராத் மாநிலம் பாரூச் நகரில்  உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில்  ஏராளமானோர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.  நான்கு மாடி கொண்ட அந்த மருத்துவமனையில் 50 நோயாளிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது.  நோயாளிகளை மீட்கும் பணியில் அங்கிருந்தவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

  ஒருமணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  நோயாளிகள் அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

  தீ விபத்து ஏற்பட்ட உடனேயே 12  பேர் உயிரிழந்ததாகவும்  காலை 6 .30 மணி நிலவரப்படி 18 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் பாரூச் எஸ்.பி. ராஜேந்திரசின்ஹ் சூடசமா தெரிவித்துள்ளார்.

  குஜராத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாரூச் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்த தகவல் அறிந்து வேதனை அடைந்ததாகவும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தனது ஆறுதலை தெரிவித்துக்கொள்வதாகவும் மோடி கூறியுள்ளார்.

  இந்த சம்பவத்துக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்த மருத்துவர்கள்,  மருத்துவ பணியாளர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்வதாக கூறிய அவர், தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: