10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து அனைவரும் தேர்ச்சி: குஜராத் அரசு அறிவிப்பு!

தற்போது, குஜராத் மாநிலம் முழுவதும் 144 தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து அனைவரும் தேர்ச்சி: குஜராத் அரசு அறிவிப்பு!
மாதிரிப் படம்
  • Share this:
குஜராத் மாநிலத்தில், பத்து மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து, அனைவரும் தேர்ச்சியடைந்ததாக அறிவிக்கப்படுவார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் கொரோனா தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் குஜராத் அரசுக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள், இடையூறுகள் இன்றி நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்ட குஜராத் மாநில அரசு, 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து, மற்ற அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Also see... 



இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்