GST Council Meet | ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.. அத்தியாவசிய மருந்துகள் மீதான வரியை நீக்க ஆலோசனை..

நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் மீதான வரியை நீக்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது.

  • Share this:
    கடந்த மே 28ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றிற்கு வரி விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மாநில நிதியமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்கள் அத்தியாவசிய மருந்து பொருட்கள் மீதான வரியை நீக்க ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது. சரக்கு சேவை வரி ரத்து செய்யப்பட்டால் மருத்துவ ஆக்ஸிஜன், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், மாஸ்க் உள்ளிட்டவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதேபோன்று கொரோனா தடுப்பூசிகள், சிகிச்சைக்கான மருந்துகள் மீதான வரியை ரத்து செய்வது, கரும்பூஞ்சை நோய்க்கான மருந்துக்கு வரி குறைப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்கு தற்போது 5 சதவீத ஜிஎஸ்டி வரியும், மருந்துகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.
    Published by:Vaijayanthi S
    First published: