டென்னிஸ் வீரருக்கு கொரோனா - தன்னிடம் இருந்து யாருக்காவது பரவியிருந்தால் மன்னிக்க வேண்டுகோள்

தன்னிடம் இருந்து யாருக்காவது தொற்று பரவியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் வீரருக்கு கொரோனா - தன்னிடம் இருந்து யாருக்காவது பரவியிருந்தால் மன்னிக்க வேண்டுகோள்
கிரிகோர் டிமிட்ரோவ்க்கு கொரோனா
  • Share this:
பல்கேரிய டென்னிஸ் வீரர் கிரிகோர் டிமிட்ரோவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தன்னிடம் இருந்து யாருக்காவது தொற்று பரவியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நோவக் ஜோகோவிச், டொமினிக் தீம் உள்ளிட்ட வீரர்களுடன் கிரிகோர் டிமிட்ரோவ் போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.


 




உடல்நலக்குறைவால் டென்னிஸ் தொடரில் இருந்து பாதியில் அவர் வெளியேறிருந்தார்.

 
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading