கொரோனாவின் பிடியிலிருந்து கிரிக்கெட்டை மீட்க கங்குலி ஐசிசி தலைவராக வேண்டும் - கிரிம் ஸ்மித் விருப்பம்

கொரோனாவின் பிடியிலிருந்து கிரிக்கெட்டை மீட்க கங்குலி ஐசிசி தலைவராக வேண்டும் - கிரிம் ஸ்மித் விருப்பம்

சவுரவ் கங்குலி

Sourav Ganguly | கொரோனாவிற்கு பின் கிரிக்கெட்டை மீட்க வலிமையான தலைவராக கங்குலி இருப்பார்.

 • Share this:
  கொரோனா பிடியிலிருந்து கிரிக்கெட்டை மீட்க வேண்டுமானால் கங்குலி ஐசிசி தலைவராக வேண்டுமென்று கிரீம் ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார்.

  கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை எந்த சிக்கலுமின்றி எப்படி நடத்துவது என்று ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

  இதனிடையே ஐசிசியின் தலைவர் பொறுப்பில் உள்ள இந்தியாவின் சஷாங் மனோகர் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. மீண்டும் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து ஐசிசி-யின் தலைமை பொறுப்பை கங்குலி ஏற்க வேண்டுமென்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு இயக்குனர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் டேவிட் கோவரும் கங்கலியின் ஐசிசி தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தார்.

  இது குறித்து கிரீம் ஸ்மித் கூறுகையில், “கொரோனாவிற்கு பின் கிரிக்கெட்டை மீட்க வலிமையான தலைவர் வேண்டும். அதற்கு கங்குலி சரியான தேர்வாக இருப்பார். நீண்ட நாட்களுக்கு பின் தொடங்கும் கிரிக்கெட் போட்டிகளை எப்படி வழிநடத்துவது என்பது கங்குலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரரால் மட்டுமே முடியும்.

  கங்குலி தலைமை பொறுப்பு அனைவரும் அறிந்த ஒன்று தான். கிரிக்கெட் போட்டி குறித்து அவர் நன்கு அறிந்தவர். சர்வதேச அரங்கில் ஜொலித்தவர். நம்பகத்தன்மை கொண்டவர். கொரோனாவிற்கு கிரிக்கெட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது“ என்றுள்ளார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vijay R
  First published: