Home /News /coronavirus-latest-news /

1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்த கூடாது - தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்த கூடாது - தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததும் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் மீண்டும் திறந்ததும் ஏற்கெனவே படித்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் தேர்ச்சி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி