GOVT WAIVES INTEREST ON INTEREST FOR LOANS UP TO RS 2 CRORE RIZ
வட்டிக்கு வட்டி வசூலிப்பது ரத்து - மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூலித்த வங்கிகள் - ரத்து செய்த மத்திய அரசு
வங்கிகளில் கடன்பெற்றிருந்தோர், 2020 மார்ச் 1ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் வரையிலான 6 மாதங்களுக்கு தவணைகளைத் திருப்பிச் செலுத்த அண்மையில் மத்திய அரசு அவகாசம் அளித்தது.
ஊரடங்கு காலத்தில் கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பது ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் 2 கோடி ரூபாய் வரையுள்ள வங்கிக் கடன்களுக்கான தவணைத் தொகையின் வட்டிக்கு வட்டி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கிகளில் கடன்பெற்றிருந்தோர், 2020 மார்ச் 1ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் வரையிலான 6 மாதங்களுக்கு தவணைகளைத் திருப்பிச் செலுத்த அண்மையில் மத்திய அரசு அவகாசம் அளித்தது. ஆனால் வங்கிகள் வட்டிக்கு வட்டி என கூட்டு வட்டி வசூலித்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி போடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணையின்போது, வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய உள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது. கூறியபடியே வட்டிக்கு வட்டி வசூல் ரத்து என்றும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு குறு, தொழில்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட 8 வகையான கடன் பெற்றிருந்தால் வட்டிக்கு வட்டி மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்துக்கு ரத்து செய்யப்படுகிறது. அவ்வாறு வட்டியுடன் தவணையை வாடிக்கையாளர் வங்கிக்கு செலுத்தி இருந்தால், அந்த மீதத் தொகை கேஷ்பேக் முறையில் வாடிக்கையாளர்களுக்கே திருப்பி அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.