நாடு முழுவதும் ரேஷனில் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 - பிரகாஷ் ஜவடேகர்!

நாடு முழுவதும் ரேஷனில் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 - பிரகாஷ் ஜவடேகர்!
கோப்புப் படம்
  • Share this:
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், அரிசி கிலோ 3 ரூபாய்க்கும் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

21 நாள் ஊரடங்கு உத்தரவின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், ஊரடங்கால் கூலித் தொழில் செய்வோர் உணவிற்கே அல்லல்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதனை கருத்தில் கொண்டு இதுவரை ரேஷன்களில் கிலோ 27 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த கோதுமையை இனி 2 ரூபாய்க்கு வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.


இதேபோல் கிலோ அரிசி 3 ரூபாய்க்கு வழங்கப்படும் எனக் கூறிய அவர் இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றார். இத்திட்டம் 3 மாதங்களுக்கு தொடரும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்