• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை - தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை - தமிழக அரசு அறிவிப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தங்களிடம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் காணொளி காட்சி மூலம் விசாரித்து முடித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.

இன்று இது குறித்து விளக்கம் அளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், சென்னையில் முழு
ஊரடங்கை நடைமுறைப்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

சென்னையில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்படுள்ள நிபுணர் குழு அதற்கான பரிந்துரையையும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி என்று தெரிவித்த எஸ்.ஆர்.ராஜகோபால், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இ-பாஸ் வழங்கப்பட்டு வருவதாக விளக்கமளித்தார்.

மேலும், சென்னையில் கொரோனா தொற்றின் ஆபத்து குறித்து தெரிந்திருந்தும் பொதுமக்கள் பலர் மாஸ்க் அணியாமல் வெளியே செல்வதாக தமிழக அரசு தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் கொரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தாங்கள் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Also read... தேனாம்பேட்டையில் ஒரே நாளில் 222 பேருக்கு வைரஸ் பாதிப்பு... சென்னை கொரோனா அப்டேட்!






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: