கொரோனா கருவிகளின் மூலக்கூறு ஆராய்ச்சி: Made in India தயாரிப்புகளுக்காக இந்திய அரசின் முயற்சி..

கொரோனா சோதனைக் கருவிகளில் பயன்படுத்தப்படும் மூலக்கூறு ஆராய்ச்சியை ஜவஹர்லால் நேரு  அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கிளை அமைப்பு தொடங்கியுள்ளது.

கொரோனா கருவிகளின் மூலக்கூறு ஆராய்ச்சி: Made in India தயாரிப்புகளுக்காக இந்திய அரசின் முயற்சி..
corona testing
  • Share this:
கொரோனா சோதனைக் கருவிகளில் பயன்படுத்தப்படும் மூலக்கூறு ஆராய்ச்சியை ஜவஹர்லால் நேரு  அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கிளை அமைப்பு தொடங்கியுள்ளது.

இந்திய அரசின் அமைப்பான ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கிளை நிறுவனமான, தனியாருக்கு சொந்தமான VNIR பயோடெக்னாலஜிஸ் நிறுவனம், florescence ஆய்வுகள் மற்றும் polymerase chain reaction ஆய்வினை மேற்கொண்டுள்ளது. கோவிட்-19 சோதனை RTPCR கருவிகளில் பயன்படுத்தப்படும் மூலக்கூறுகளை இது ஆய்வு செய்யக்கூடிய திறன் படைத்ததாகும். VNIR Biotechnologies நிறுவனம் கர்நாடக அரசின் பெங்களூரு Bio-Innovation மையத்தில் இயங்குகிறது.

VNIR இணை நிறுவனர்களான பேராசிரியர் டி. கோவிந்தராஜூ மற்றும் டாக்டர் மெகர் பிரகாஷ் ஆகியோர் Florescence RTPCR கண்டுபிடிப்பு ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த மூலக்கூறு ஆய்வுகள் கோவிட்-19 பரிசோதனைக் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. பிசிஆர் அடிப்படையிலான சோதனைக் கருவிகள் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டதாக உள்ளது ( oligos, enzymes, Molecular research). முதல் இரண்டும் இந்தியாவில் பகுதியாக கிடைக்கிறது.


தற்போது சோதனைக் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தாலும், எதிர்காலத்தில் இந்த குறிப்பிட்ட தொற்றுக்கு மட்டுமின்றி மற்றவைக்கும் சோதனைக் கருவிகளுக்கான உதிரிக்கருவிகளை உற்பத்தி செய்வதற்கான முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading