முகப்பு /செய்தி /கொரோனா / ஓராண்டுக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்படாது - நிர்மலா சீதாராமன்

ஓராண்டுக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்படாது - நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

செலவுகளை குறைக்கும் விதமாக ஓராண்டுக்கு 500 கோடி ரூபாய் வரையுள்ள புதிய திட்டங்கள் தொடங்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரிப் கல்யாண் யோஜனா, ஆத்ம நிர்பர் பாரத் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள திட்டங்கள் மற்றும் மதிப்பீட்டின் கீழ் இருக்கும் புதிய திட்டங்களுக்கும் நிதி கிடையாது எனவும் மத்திய செலவினத்துறை அனுமதியளித்த அரசின் கொள்கைசார் திட்டங்களுக்கும் இது பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதனால், ஓராண்டுக்கு புதிய திட்டங்கள் ஆரம்பிப்பது குறித்த கோரிக்கைகளை அனைத்து அமைச்சகங்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also read... ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Also see...

First published:

Tags: Minister Nirmala Seetharaman